Monday, October 24, 2011

தீபாவளி

இருள் மீது
ஒளி கொண்ட  வெற்றியை
பெருமிதத்துடன் பறை சாற்றி
அணிவகுத்து வருகின்ற தீபங்கள்
பரப்பும்  ஒளி  தன்னில்

மன  இருள்   அகன்று 
மெய் ஞானம்  பரவி

கங்கையில்  குளித்து
புதுடுதி
இனிப்புண்டு 
இன்பம்  பகிர்ந்து
களிப்புற்று
கொண்டாடுவோம்  இன்னொரு  தீபாவளியை !

தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

Friday, October 21, 2011

காயம் காத்திடு

கூரில்லா மனிதரின் கூறான வார்த்தைகள்
கிழிதித் தோய்ந்தது  இதயப் பையை
இனி இதில் காற்றும் கூட நிற்க  வில்லை

உறுதி என்னும் நூலெடுத்து
கூர் ஊசிமுயற்சி கொண்டு
துணிந்து தைத்திடு உன் இதயத்தை
அதில் முத்தாய்  காத்திடு  உன் காயங்களை
நாளை நீ செல்லும் பாதையை தெளிவாக்கும் இவை 
துயரங்கள்  தூக்கும்  உன்  துணிவை
காயங்கள்  காக்கும்  உன்  கனிவை 
பக்குவமாய் பாது காக்கும் பணிவை

காயங்களை கண்டு அஞ்சுவதை விடு
உன் முனேற்ற பாதையில் உறுதி நடை போடு

Thursday, October 20, 2011

பெண்ணழகே!

கூறிய  வேர்முனை  கன்னி  உன்  கண்ணழகு
பூம்பாவை  இவள்  உதிர்த்த  சொல்  முத்தழ்ழகு
நாணி  குனிந்த  நின்  தலை  அழகு
எனை  நாடாமல்  சென்ற  நடை  அழகு
சொல்  நடுவே  உதிரும்  உன்  சிரிப்பழகு
சிரிப்பு  உணர்த்திய  பர்கலழகு

கோவிலிலே  குடி  கொண்ட  காட்வுளின்  குணங்கள்
உனஊல்  புதையலாய்  கிவிண்டிருக்க  கண்டேன்
பொறுமையில்  எட்டிய  ஒன்ன  இமயத்தை  கண்டேன்
கண்களில்  கசிந்துருகும்  காதலையும்  கண்டேன்
இன்று  உன்  பேச்சரிவில் பரந்த  விண்ணையும்  கண்டேன்

பெண்ணழகே !

உன்  அழகில்  என்  மதி  மயங்கின
உன்னை  காணாமல்  என்  உடல்  வாடின
உன்  வெண்  மதி  முகம்  காண  என்  கண்கள்  குசின


மறைந்து  போகிறேன்  உன்  இருள்  திரைக்குள்
மனம்  பரப்புகிறேன்  உன்  சவத்தில்  கலக்க 
மலருகின்றேன்  என்றும்  உன்  மனம் மகிழ 

இன்று மலர்ந்த என எண்ணம் ஈடேற
பெண்ணே என்னை சூடிடுவை என்னை வாடாமல் காத்திடுவாய்!
 

சக்கரம்

மிச்சம்  பிடித்து
சொச்சம்  சேர்த்து
இச்சை  குறைத்து
உச்சி  முடி  தேய்ந்து
சச்சரவு  சந்தித்து
இச்சகதிலுள்ள வாழ்கை 
சக்கரமாய்  சுழன்றோடுகிறது 

Wednesday, August 31, 2011

சுவடுகள் - 2

என்னோடு நிழலாய் நின்றவள் 
இன்று என்வீட்டில் புகை படமாய்!
அன்னையே உன்னால் உருவான இவ்வுடல்
இன்று  உன்னையே தாங்குகிறது நினைவுகளாய் 
உன் வரவை எண்ணி ஏங்குகிறது கனவுகளாய்


Sunday, June 5, 2011

சுவடுகள்

என்றும் கட்டி அணைத்து மகிந்ழ்த்த என் அன்பு அன்னை
இன்று தொட்டு பார்கிறேன் உன் புகைப்  படத்தை
குலுக்கி பார்கிறேன் உன் வளையல்களை
நுகர்ந்து பார்கிறேன் உன் சேலைகளை
நடந்து பார்கிறேன் நீ கடந்துசென்ற மணல் மேடுகளை
நினைத்து பார்கிறேன் உன் குங்குமம் தங்கிய மஞ்சள் முகத்தை
நீ விட்டு சென்ற காலச் சுவடுகளாய்
உன் எண்ணங்கள் நிறைந்த என் மனமும் ஆனது
உன் நினைவுகள் தாங்கி இன்றும் என் காலங்கள் நகர்கின்றன

கிராமத்து வீடு


முற்றதில் குடையாய் நிற்கும் தென்னை மறக் கீற்றோலி
 தூரத்தில் தோன்றும் மருத மலை சாரல் துளி
அங்கே மெதுவாய் நகர்ந்து வரும்
தென் மேற்கு பருவ மேகம்

மஞ்சள் தோட்ட  நறு மணக காற்று
ஆணை மலை அருவி கீற்று

கருப்பு வெள்ளை பூனை குட்டி
வரி வரியாய் அலை பாயும் எறும்பு கூட்டம்
வேப்ப மரக் காய் உண்ணும் கிளிக் கூட்டம்

வாசலில் மணக்கும் சானக் குழம்பு
அதில்  பாந்தமாய்  வரைந்த  வெள்ளைக்  கோலம்

முள் தாங்கும் முன் வாசல் எலுமிச்சை மரம்
இன்றும் அழகிய பூக்கள் தங்கிய மாதுளை மரம்
அடுக்கடுக்காக குலுங்கும் அரளி பூச்செண்டு
வீசும் காற்றில் மனம் கலந்த மருதாணி பூவும்
குருவிகள் கொதித் தின்று விளையாடும் சீதா பழ  மரம்
தேன்றலிற்கே இதமாய் வீசி மகிழும் வாழை  இலைகளும்

மஞ்சள் நிற மன்டாராபூ ,
சிவப்பு நிற சாயம்போன செம்பருத்தி
அடுக்கு மல்லிகை , பூத்து  குலுங்கும் முல்லை மலர்
கண்களுக்கு இதமான நந்தியவட்டை 
பூஜைக்கு உகந்த பவள மல்லி
கோடி படரத சங்கு புஷ்பம்
கூட்ட மிட்டு வளரும் நித்ய கல்யாணி
அங்கும் இங்கும் எங்கும் வளர்த்திருக்கும் கரு வேப்பிலை
வாசக் காபானாய் முன்னே விருந்து பறந்து நிற்கும் வேப்ப மரமும்

தும்பை நிறச் சேலை கடிய கிழவிகள்
கன்னங்களில் குழி விழ சிரிக்கும் குழந்தைகள்
பள்ளி குட மணி யோசை கேட்டு சிட்டை பறக்கும் சிறிவர்கள்
தெருக்களில் விறகு பொறுக்கும் தினக் கூலிக்காரர்கள்  

சுதந்திர காற்றில் உல்லாசமாய் சுற்றித் திருந்து
இயற்கையில் ஒன்றி  வாழும் 
மனிதர் அறியா மண்ணில் உள்ள சொர்க்கம் இது